விவசாயிகளின் நம்பிக்கை

கோல்டன்
ஃபெர்டிலைசர்

அனைத்தும் ஒரே இடத்தில்

விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கண் முன்னே அரைத்துத் தரப்படும்.

பெருமதிப்பிற்குரிய வேளாண் பெருமக்களே !!!

பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து (யூரியா), மணிச்சத்து (DAP), சாம்பல் சத்து (பொட்டாஷ்), சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ஜிப்சம் போன்ற உரங்கள் கிடைக்கும்.

காம்ப்ளக்ஸ் உரங்கள் :

10:26:26 20:20:0:13 17:17:17 16:16:16

ஆகிய அனைத்து கலப்பு உரங்களும் சரியான விகிதத்தில் கிடைக்கும்.

நீரில் கரையும் உரங்கள் :

19:19:19 (NPK) 13:00:45 பொட்டாசியம் நைட்ரேட் 12:61:00 (MAP) கால்சியம் நைட்ரேட் (CN) கால்சியம் நைட்ரேட் + போரான் (CN+B) சல்பேட் ஆப் பொட்டாஷ் (SOP)

ஆகிய உரங்களும் கிடைக்கும்.

தரமான தென்னை நுண்ணூட்ட கலவையான ZINC, BORON, COPPER, MANGANESE, FERROUS, MAGNESIUM போன்றவை கலவையாகவும் தனித்தனியாகவும் கிடைக்கும்.

இரண்டாம் நிலை நுண்ணூட்ட சத்துக்களான (CMS) கலவை கிடைக்கும்.

தென்னை மரத்திற்கு என்று பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் கிடைக்கும்.

(தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதில் அடங்கும்.)

பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் கிடைக்கும்.

தென்னை மரத்திற்கு வேர் மூலம் மருந்து கட்டுவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்கும்.

(தென்னை மரத்திற்கு வேர் மூலம் மருந்து கட்டி தரப்படும்.)

எண்ணெய் எடுக்காத, கலப்படம் இல்லாத சுத்தமான வேப்பம் புண்ணாக்கு அரைத்து தரப்படும்.

(நேரில் வந்து அருகில் இருந்து பார்த்து அரைத்து கொள்ளலாம்.)

மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்)

கடந்த 46 ஆண்டுகளாக உங்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள SAL நிறுவனம் மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரத்தினை தற்போது அதிக சக்தியுடன் புதிய தோற்றத்தில் வழங்குகிறோம்.

மித்ரா கோல்டு தென்னை ஸ்பெஷல்

மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் பயிர் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பேரூட்டச் சத்துகளும், நுண்ணூட்டச் சத்துகளும் நிறைந்தது.

தென்னையில் வரும் சத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனால் மரம் சீரான வளர்ச்சி அடைந்து அதிக மகசூல் தருகின்றது.

மண்ணின் குறைபாடுகளான காரத்தன்மை, உவர்ப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மைகளை சரிசெய்து அதிக மகசூல் பெற வழிவகை செய்கிறது.

தென்னை மரத்தின் வளர்ச்சியை அதிகரித்து, அதிக பாளைகளை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு பாளையிலும் எண்ணற்ற பூக்களை பூக்கச் செய்வதோடு, தென்னை மரத்தில் தோன்றும் அனைத்து நுண்ணூட்டக் குறைபாடுகளையும் முற்றிலும் சரி செய்கிறது.

பயிர் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் நிறைந்தது.

தென்னையில் ஒல்லிக்காய்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. பாளை மற்றும் மட்டைகளின் தடிமனை அதிகப்படுத்துகிறது.

தென்னையில் குறும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, அதிக மகசூல் பெற வழிவகுக்கிறது.

20%–30%
வரை விளைச்சல் அதிகரிப்பு

தென்னை சாகுபடியில் SAL நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் பயன்படுத்துவதனால் 20%–30% விளைச்சல் அதிகரிக்கும் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

எனவே தயக்கம் இல்லாமல் இன்றே மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரத்தை உபயோகப்படுத்தி பயன் பெறுங்கள்.

உபயோகப்படுத்தும் முறை

தென்னை மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 1/2 வட்ட வடிவில் மண்ணிற்கு மேலே 2 கிலோ முதல் 2½ கிலோ வரை, நான்கு மாதத்திற்கு ஒரு முறை (வருடத்திற்கு 3 முறை) இட வேண்டும்.

குறிப்பு: குழி எடுத்து உரம் இட வேண்டிய அவசியம் இல்லை.

வேப்பம் புண்ணாக்கு

எண்ணெய் எடுக்காது, கலப்படமில்லாத, சுத்தமான வேப்பம்புண்ணாக்கு அரைத்து கொடுக்கப்படும்.

வேளாண்மையில் வேப்பின் முக்கிய பயன்பாடுகள்

வேப்பம் புண்ணாக்கு செடிகளுக்கு உரமாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல், செடிகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் 20 வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள அசோடிராக்டின் என்ற வேதிப்பொருள் பயிர்களில் உள்ள பூச்சிகளை உண்ண விடாமல் தடுக்கிறது.

மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. அதனால நைட்ரஜன், எதிர்ப்பு தன்மை உடையது மற்றும் மண்ணில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கிறது.

வேப்பம் புண்ணாக்கு இடத்தைச் செம்மாடு, முக்கியமாக உரம் மற்றும் பூச்சி விரட்டியாக இருப்பதால் இது ஒரு விருப்பமான உள்ளீடாக மாறியுள்ளது.

பயிர்களில் ஏற்படும் பூஞ்சை நோய்கள், வேர் அழுகல், வேம்பழு, சீட் வாடுதல், பூச்சிகள், வண்டுகள், வாடல் நோய், சுருக்கு காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.

மண்ணின் தன்மை, கட்டமைப்பு மற்றும் வேதியன்புகளை மேம்படுத்தி மண்ணின் காற்றோட்ட தன்மையை அதிகரிக்கிறது.

இது மண்ணில் உள்ள கார, அமில தன்மையை சீராக வைக்க உதவுகிறது.

உரங்களுடன் பயன்படுவதும் போது அவற்றின் செயல்திறனை மேம்படுத்தி மிக மெதுவாக அவற்றின் சத்துக்களை வெளியிட உதவுகிறது.

15%–25%
வரை மகசூல் அதிகரிப்பு

ஆர்டரின் போது தொலைபேசி அல்லது நேரில் சொன்னால் மட்டுமே அரைத்து கொடுக்கப்படும்.

தென்னை மரங்களுக்கு நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்குவதன் நன்மைகள்

மித்ரா கோல்டு தென்னை ஸ்பெஷல்

குரும்பை மற்றும் இளங்காய் உதிர்தல் குறையும்.

காய் பிடிப்பு மற்றும் மகசூல் அதிகரிக்கும்.

தேங்காய்களின் அளவு, எடை மற்றும் தரம் மேம்படும்.

இலைகள் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மரத்தின் வறட்சி மற்றும் நோய் தாங்கும் திறன் உயரும்.

ஆண்டுதோறும் நிலையான மற்றும் அதிக உற்பத்தி கிடைக்கும்.

பொதுவாக நுண்ணூட்டக் கலவைகளில் இடம்பெறும் சத்துக்கள்

துத்தநாக சல்பேட் (Zinc Sulphate)

புதிய இலைகள் மற்றும் தளிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குரும்பை உதிர்தலைக் குறைத்து மரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

போராக்ஸ் (Borax)

பூக்கள் மற்றும் காய்கள் நன்கு உருவாக உதவுகிறது. காய் பிடிப்பை அதிகரித்து இளங்காய் உதிர்வை குறைக்கிறது.

இரும்பு சல்பேட் (Ferrous Sulphate)

இலைகளின் பசுமையைப் பராமரித்து ஒளிச்சேர்க்கை திறனை அதிகரிக்கிறது. இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் இலை மஞ்சளாதலைத் தடுக்கிறது.

மாங்கனீஸ் சல்பேட் (Manganese Sulphate)

புதிய இலைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. மரத்தின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

காப்பர் சல்பேட் (Copper Sulphate)

தண்டு மற்றும் இலைகளின் வலிமையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி மரத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மக்னீசியம் சல்பேட் (Magnesium Sulphate)

பச்சையத்தின் உருவாக்கத்திற்கு அவசியமானது. இதனால் இலைகள் அதிக பசுமையுடன் இருந்து உணவு தயாரிக்கும் திறன் மேம்படுகிறது.

தொடர்புக்கு

M. ராஜகோபால் (Agri.), DAI, TNAU

14/120-3,
ஜம் ஜம் கார்டன்,
மாக்கினாம்பட்டி,
பொள்ளாச்சி - 03